/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக முற்றுகை பத்திர எழுத்தர்கள் சங்கத்தினர் போர்க்கொடி
/
தேனி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக முற்றுகை பத்திர எழுத்தர்கள் சங்கத்தினர் போர்க்கொடி
தேனி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக முற்றுகை பத்திர எழுத்தர்கள் சங்கத்தினர் போர்க்கொடி
தேனி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக முற்றுகை பத்திர எழுத்தர்கள் சங்கத்தினர் போர்க்கொடி
ADDED : பிப் 20, 2024 05:54 AM

தேனி : தேனி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுக்கு வரும் ஆவணங்களை முறையான காரணம் இன்றி தள்ளுபடி செய்வதை கண்டித்து பத்திர எழுத்தர்கள் சங்கத்தினர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தேனி சார்பதிவாளர் அலுவலகம் பத்திரப்பதிவில் மாநிலத்தில் அதிக வருவாய் ஈட்டித்தரும் பட்டியலில் 51வது இடத்தில் உள்ளது. இதனால் பதிவுத்துறை இந்த சார்பதிவாளர் அலுவலகத்தை 'ஏ கிரேடு' அலுவலகமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் இங்கு நாள்தோறும் தட்கல்' பதிவு விண்ணப்பங்களுடன் இணைந்து 110 பேர் பதிவுக்காக விண்ணப்பிக்கின்றனர்.
கடந்த 10 நாட்களாக முன் இங்கு சார்பதிவாளர் மாரீஸ்வரி பதவி ஏற்றார். இந்நிலையில் தேனி அலுவலகத்தில் பத்திரப்பதிவிற்கு பேரம் பேசி பணம் வசூலிப்பாகவும், பதிவு செய்த தாமதப்படுத்துவதாக கூறி நேற்று தேனி பத்திர எழுத்தர் சங்கம், விவசாயிகள், பொது மக்கள் தேனி பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.இதனால் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டது.
பேரம் பேசி வசூல்
பத்திர எழுத்தர் சங்க தலைவர் திருமால்ரத்தினம் கூறுகையில், பதிவுத்துறை நிர்ணயித்த கட்டணத்திற்கு கூடுதலாக ஒரு பதிவில் எத்தனை சதுரடி இருந்தாலும் ஒரு செண்டுக்கு தலா ரூ.20 ஆயிரம் என பேரம் பேசி வசூல் செய்த பின்பே பதிவு செய்கிறார். இது பதிவுத்துறை விதிகளுக்கு முரணாக உள்ளது.
மாற்றுத்திறனாளி, முதியோர் விண்ணப்பங்களை முறையற்ற, சரியான காரணங்கள் இன்றி தள்ளுபடி செய்கிறார்,' என்றார்.
அலைக்கழிப்பு
செயலாளர் ஜெகதீசன் கூறுகையில், நாள் ஒன்றுக்கு 100 பதிவுகள் நடந்த அலுவலகத்தில் தற்போது 25 முதல் 40 பதிவு நடக்கின்றன. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனால் பத்திர எழுத்தர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
கிரைய பத்திரத்தில் தேவையற்ற விபரங்களுக்காக ஊரக நகரமைப்பு அலுவலகத்திலும், வி.ஏ.ஓ.,க்களிடம் சான்றிதழ் பெற்று வர கூறி அழைக்கழிக்கின்றார்,' என்றார்.
சார்பதிவாளர் மாரீஸ்வரி கூறுகையில், 'பதிவுக்கு வைக்கப்படும் ஆவணங்கள் 'பான்' கார்டு கூட இல்லாமல் வருகிறது. பேரம் பேச வேண்டிய அவசியம் இல்லை. பதிவுத்துறை விதிகளின்படி ஆவணங்கள் இல்லாத பதிவுகளை நிறுத்தி உரிய ஆவணங்கள் வந்த பின் பதிவு செய்கிறேன்.
என் மேல் தவறு இருந்தால் மாவ்டட பதிவாளரிடம் புகார் தெரிவிக்கலாமே, அதை விடுத்து, இங்கு வந்து முற்றுகையிடுவது தேவையில்லை.', என்றார்.

