ADDED : மார் 14, 2024 04:49 AM

தேனி: தேனி - போடி ரோட்டில் கோடாங்கிபட்டி பெட்ரோல் பங்க் அருகே அரசு பஸ் மீது ஆட்டோ மோதிய விபத்தில் போடி குப்பிநாயக்கன்பட்டி ஆட்டோ டிரைவர் மதன்குமார் 40, பலியானார்.
மதன்குமார் அரப்படிப்படிதேவன்பட்டியில் மனைவியுடன் வசித்தார். நேற்று மாலை போடி வரை சவாரி சென்றவர் மீண்டும் போடி - தேனி ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே உள்ள பேக்கரியில் ஆட்டோவை நிறுத்தினார். இரவு 7:50 மணிக்கு தேனி செல்ல ஆட்டோ எடுத்து ரோட்டில் திரும்பினார். அப்போது தேனியில் இருந்து போடி நோக்கி சென்ற சென்ற அரசு பஸ், முன்புறம்அதிவேகமாக சென்ற ஆட்டோவை முந்திச்செல்ல முயன்றது. அரசு பஸ்ஸூம் ஆட்டோவும் மோதிய விபத்தில், ஆட்டோவின் முன்புறம் சேதமடைந்து மதன்குமார் பலியானார். பஸ்சின் முன்புற கண்ணாடி உடைந்து ரோட்டில் சிதறியது.
மறியல்
குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் விபத்து நடந்த இடத்தில் மறியலில் ஈடுபட்டனர். இரவு 7:50 முதல் 9:15 வரை தேனி - போடி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போடி டி.எஸ்.பி., பார்த்திபன், தேனி இன்ஸ்பெக்டர் உதயகுமார் சமாதானப்படுத்தினர். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

