/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஏ.டி.எம்., இயந்திரங்களில் பணம் செலுத்தும் வசதி தேவை
/
ஏ.டி.எம்., இயந்திரங்களில் பணம் செலுத்தும் வசதி தேவை
ஏ.டி.எம்., இயந்திரங்களில் பணம் செலுத்தும் வசதி தேவை
ஏ.டி.எம்., இயந்திரங்களில் பணம் செலுத்தும் வசதி தேவை
ADDED : டிச 18, 2025 06:04 AM
கடமலைக்குண்டு: மலைக்கிராமங்களான வருஷநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு பகுதிகளில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் செயல்படுகிறது.
பல வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப பணம் பெறுவதற்கு ஏ.டி.எம்., மெஷின்கள் அமைத்துள்ளனர்.
வங்கி கிளைகள் இல்லாத பகுதியிலும் விடுமுறை நாட்களிலும் பொதுமக்கள் ஏ.டி.எம்., மெஷின் மூலம் பணம் எடுத்து வருகின்றனர். இப்பகுதி கிராமங்களில் உள்ள மெஷின்களில் பணம் செலுத்தும் வசதி இல்லை.
மலைப்பகுதி கிராமங்களில் கொட்டை முந்திரி, இலவம்பஞ்சு, இளநீர், தேங்காய், மற்றும் காய்கறிகள் வாங்குவதற்கு வியாபாரிகள் வெளியூர்களில் இருந்து வந்து செல்கின்றனர்.
பொதுமக்கள், வியாபாரிகள் தங்களது வங்கி கணக்கில் அவசரத்திற்கு பணம் செலுத்த முடியாமல் பலரும் தவிக்கின்றனர். பணம் செலுத்துவதற்கு தேனி, ஆண்டிபட்டி, சின்னமனூர் பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.
பணத்துடன் பயணிப்பது பலருக்கும் பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்துகிறது.
எனவே மலைக்கிராமங்களான வருஷநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் ஏ.டி.எம்., மெஷின்களில் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்த வங்கி நிர்வாகங்கள் முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

