/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆண்டிபட்டி - ராஜபாளையம் சிறப்பு பஸ் இயக்க வலியுறுத்தல்
/
ஆண்டிபட்டி - ராஜபாளையம் சிறப்பு பஸ் இயக்க வலியுறுத்தல்
ஆண்டிபட்டி - ராஜபாளையம் சிறப்பு பஸ் இயக்க வலியுறுத்தல்
ஆண்டிபட்டி - ராஜபாளையம் சிறப்பு பஸ் இயக்க வலியுறுத்தல்
ADDED : மார் 04, 2024 06:18 AM
ஆண்டிபட்டி: மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆண்டிபட்டி பகுதியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதிக்கு குலதெய்வம் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக ஆண்டிபட்டியில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் வசதிக்கு ஏற்பாடு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.
மகா சிவராத்திரி விழா மார்ச் 8ல் துவங்குகிறது. இந்த விழாவுக்காக தேனி மாவட்டத்தில் இருந்து மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று திரும்புவர். வரும் வெள்ளி, சனிக்கிழமை குல தெய்வம் கோயில்களில் நடைபெறும் பூஜையில் பங்கேற்க ஒரே நாளில் பலரும் செல்வதால் மதுரை, விருதுநகர், ராஜபாளையம் செல்லும் அனைத்து பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழியும். பக்தர்கள் வசதிக்காக தேனியில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்பட வேண்டும். அந்நாட்களில் தேனியில் இருந்து ஆண்டிபட்டி வழியாக செல்லும் அனைத்து பஸ்களிலும் அதிக கூட்டம் ஏற்படுவதால் ஆண்டிபட்டியில் இருந்து விருதுநகர், ராஜபாளையம் செல்லும் பக்தர்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கின்றனர். ஆண்டிபட்டியை மையமாக வைத்து பல கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் இரு நாட்களும் சென்று திரும்புவர். எனவே மகாசிவராத்திரி நாளில் ஆண்டிபட்டியில் இருந்து ராஜபாளையத்திற்கு சிறப்பு பஸ்கள் வசதிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

