/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உண்மைக்கு புறம்பான குறுஞ்செய்தி செய்தி அனுப்பினால் நடவடிக்கை தேனி எஸ்.பி., எச்சரிக்கை

ADDED : மார் 19, 2024 05:49 AM
தேனி : உண்மைக்கு புறம்பாக குறுஞ்செய்தி அனுப்பியது கண்டறிந்தால் சைபர் கிரைம் போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.' என, தேனி எஸ்.பி., சிவபிரசாத் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது: மாவட்டத்தில் சுதந்திரமான, நியாயமான முறையில் லோக்சபா தேர்தல் நடத்தும் வகையில் குறுஞ்செய்தி, சமூக வலைதளங்கள் மூலமாகவோ உண்மைக்கு புறம்பான செய்தியை எழுத்து வடிவிலோ, காட்சி வடிவிலோ அல்லது ஒலி, ஒளி வடிவிலோ தவறான உள்நோக்கம் கொண்டு வெளியிடுபவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொது மக்கள், சம்பந்தப்பட்ட நபர்கள் புகார்கள் அளிக்க பிரத்யேகமாக தேனி மாவட்ட போலீசாரால் 04546 -- 261 730 என்ற தொலை பேசி எண், 93638 73078 என்ற அலைபேசி எண்ணில் வாக்காளர்கள் புகார் அளிக்கலாம்.
மேலும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரம் குற்றச்சம்பங்கள் நடக்காத வண்ணம் கண்காணிக்கப்படுகிறது என இவ்வாறு அவர் தெரிவித்தார்.