/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தந்தங்களை வைத்து அடையாளம் காணப்படும் படையப்பா யானை
/
தந்தங்களை வைத்து அடையாளம் காணப்படும் படையப்பா யானை
தந்தங்களை வைத்து அடையாளம் காணப்படும் படையப்பா யானை
தந்தங்களை வைத்து அடையாளம் காணப்படும் படையப்பா யானை
ADDED : செப் 29, 2025 02:14 AM

மூணாறு: வளைந்து நீளமாக கூர்மையுடன் காணப்படும் தந்தங்களை வைத்து படையப்பாவை மக்கள் அடையாளம் கண்டு வருகின்றனர்.
மூணாறு, தேவிகுளம் ஆகிய ஊராட்சிகளில் வனத்துறையினரின் கணக்குப்படி 28க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. அவற்றில் படையப்பா ஆண் காட்டு யானை மிகவும் பிரபலம். பெயருக்கு ஏற்ப கம்பீரமான தோற்றத்துடன், அதன் தந்தங்கள் பார்ப்போருக்கு அச்சத்தை ஏற்படுத்தும். படையப்பா தோற்றத்தில் வேறு சில யானைகள் உள்ளபோதும் வளைந்து நீளமாக கூர்மையாக உள்ள தந்தங்களை வைத்து படையப்பாவை மக்கள் எளிதாக அடையாளம் காண்கின்றனர். அதன் அடையாளத்தை போன்று தனக்கென தனி வழியில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளதால், அதன் நடமாட்டத்தை எளிதில் யூகித்துக் கொள்ளவும் வனத்துறையினரால் முடிகிறது.
மூணாறு அருகே நயமக்காடு எஸ்டேட் பகுதியில் கடந்த ஒரு வாரமாக முகாமிட்ட படையப்பா, அப்பகுதியை விட்டு வெளியேறி 5ம் மைல், கடலார் எஸ்டேட் ஆகிய பகுதிகளில் சுற்றித் திரிந்தது.
இந்நிலையில் மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் பெரியவாரை, குருசடி பகுதியில் நேற்று அதிகாலை 4:00 மணி முதல் படையப்பா நடமாடியதால் பொது மக்கள், சுற்றுலாப் பயணிகள் காலை வேளையில் அச்சத்துடன் பயணித்தனர்.

