ADDED : பிப் 14, 2024 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி கம்மவார் சங்கம் பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் கோவை எல்.எம்.டபுள்யூ., நிறுவனத்தால் நேர்காணல் நடத்தப்பட்டது. இதில் 94 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் தேர்வு செய்யப்பட்ட 72 மாணவர்கள் மனிதவள மேம்பாட்டு அதிகாரி ரவிக்குமார் அறிவித்தார்.
தேனி கம்மவார் சங்க தலைவர் நம்பெருமாள்சாமி, பொதுச்செயலாளர் மகேஷ், பாலிடெக்னிக் கல்லுாரி செயலாளர் சீனிவாசன், இணைச்செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் தாமரைக்கண்ணன், கல்லுாரி முதல்வர் தர்மலிங்கம் மாணவர்களை வாழ்த்தினர். வேலை வாய்ப்பு அதிகாரிகள் சதீஷ், சதீஷ்குமார் நேர்காணலை ஒருங்கிணைத்தனர்.

