/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கோடையில் குளுமையை தேடி மூணாறில் குவிந்த சுற்றுலா பயணிகள்
/
கோடையில் குளுமையை தேடி மூணாறில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கோடையில் குளுமையை தேடி மூணாறில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கோடையில் குளுமையை தேடி மூணாறில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ADDED : ஏப் 15, 2024 01:03 AM

மூணாறு,- மூணாறில் மூன்று மாதம் இடைவெளிக்கு பிறகு கோடையில் குளுமையை தேடி சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
மூணாறில் ஆங்கில புத்தாண்டு, பொங்கல் ஆகிய விடுமுறையில் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்தனர்.
அதன்பிறகு தொடர் விடுமுறை இன்றியும், பள்ளி, கல்லூரிகளில் தேர்வு உள்பட காரணங்களால் பயணிகள் வருகை வெகுவாக குறைந்தது. இந்நிலையில் கேரளாவில் ரம்ஜான் பண்டிகை ஏப்.10ல், தமிழகத்தில் ஏப்.11ல் கொண்டாடப்பட்டது. அதனையொட்டி மூன்று மாதங்களுக்கு பிறகு மூணாறில் பயணிகள் குவிந்தனர்.
தவிப்பு: அதனால் மூணாறு நகர், ராஜமலைக்குச் செல்லும் நுழைவு பகுதியான 5ம் மைல், மாட்டுபட்டி உள்பட முக்கிய சுற்றுலா பகுதிகள் அனைத்தும் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டது. அதில் பல மணி நேரம் சிக்கிய பயணிகள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல இயலாமல் தவித்தனர்.
ஏமாற்றம் : கோடை காலத்தில் குளுமையை தேடி மலை பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பகுதிகளுக்கு பயணிகள் வருவது வழக்கம். அது போன்று வந்த பயணிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. மூணாறில் கடந்த இரண்டு வாரங்களாக வழக்கத்தை விட வெப்பம் அதிகரித்தது. பகலில் அதிகபட்ச வெப்பம் 29 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தது. அதே நிலை கடந்த இரண்டு நாட்களாக நிலவியதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

