/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மனுத்தாக்கலுக்கு இன்று கடைசி நாள்: கூடுதல் பாதுகாப்பு
/
மனுத்தாக்கலுக்கு இன்று கடைசி நாள்: கூடுதல் பாதுகாப்பு
மனுத்தாக்கலுக்கு இன்று கடைசி நாள்: கூடுதல் பாதுகாப்பு
மனுத்தாக்கலுக்கு இன்று கடைசி நாள்: கூடுதல் பாதுகாப்பு
ADDED : மார் 27, 2024 12:06 AM
தேனி: லோக்சபா தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் தேனி கலெக்டர் அலுவலகத்தில் கூடுதல் பாதுகாப்பிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் ஏப்.,19ல் நடக்கிறது. இதற்காக வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 20ல் துவங்கியது.
மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். நேற்று முன்தினம் அ.தி.மு.க., நா.த.க., உள்ளிட்ட 5 பேர் மனுத்தாக்கள் செய்திருந்தர். நேற்று திரிணமுல் காங்., வேட்பாளர் உட்பட 4 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் இன்று தி.மு.க., வேட்பாளர் தங்க தமிழ் செல்வன் காலை 11:00 மணிக்கு நேரு சிலையில் இருந்து ஊர்வலமாக செல்கின்றனர். அ.ம.மு.க, வேட்பாளர் தினகரன் மதியம் 2:00 மணிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்கின்றனர். சுயேட்சைகள் பலர் மனுத்தாக்கல் செய்ய வருவர் என்பதால் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட உள்ளனர்.
சில மாவட்டங்களில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய போது இரு கட்சியினர் இடையே மோதல்கள் ஏற்பட்டன. முக்கிய கட்சி வேட்பாளர்கள் இருவரும் இன்று மனுத்தாக்கல் செய்வதால் தேனியில் தொண்டர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என கருதி போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

