/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாத்திரை சாப்பிடாமல் ஓட்டுச்சாவடி சென்றவர் உயிரிழப்பு
/
மாத்திரை சாப்பிடாமல் ஓட்டுச்சாவடி சென்றவர் உயிரிழப்பு
மாத்திரை சாப்பிடாமல் ஓட்டுச்சாவடி சென்றவர் உயிரிழப்பு
மாத்திரை சாப்பிடாமல் ஓட்டுச்சாவடி சென்றவர் உயிரிழப்பு
ADDED : ஏப் 22, 2024 05:52 AM
தேவதானப்பட்டி, தேவதானப்பட்டியில் தேர்தல் நாளன்று மாத்திரை சாப்பிடாமல் ஓட்டுச்சாவடிக்கு ஜனநாயக கடமை ஆற்றச் சென்ற தமிழ்செல்வி, உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி வடக்கு தெரு வேலுச்சாமி மனைவி தமிழ்செல்வி 54. இருதய நோயால் பாதிக்கப்பட்டவர் அதற்காக மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்தார்.
ஏப்.19ல் லோக்சபா தேர்தல் நாளன்று மாத்திரை சாப்பிடாமல் ஓட்டுப்பதிவு செய்ய, ஓட்டுச்சாவடி சென்றுவிட்டு வீடு திரும்பினார்.
உடல் நலம் பாதிக்கப்பட்டு பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்தவர் நேற்று உயிரிழந்தார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.