/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பூத் சிலிப்புடன் பணம் தரலியே சொல்லி வாங்கி தாங்க ... மூதாட்டியிடம் 'எஸ்கேப்' ஆன அதிகாரி

ADDED : ஏப் 16, 2024 04:54 AM
போடி: தேர்தல் என்றாலே கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், வாக்காளர்களுக்கு திருவிழா தான். வேட்பாளர்கள் பிரசாரத்திற்கு வரும் போது மக்களுக்கு 'கவனிப்பு' செய்து கூட்டத்திற்கு அழைத்து வருவது வழக்கமாக உள்ளது.
ஓட்டுக்கு பணம் கொடுத்து வாக்காளர்களை பழக்க படுத்தி விட்ட நிலையில் வேட்பாளர், கட்சி நிர்வாகிகள் ஓட்டு கேட்க சென்றாலே எப்போது 'கவனிப்பு' என்றே கேட்கின்றனர். கடந்த லோக்சபா தேர்தலில் மூன்று இலக்கத்திலும், சில இடங்களில் நான்கு இலகத்திலும் கவனிப்பு நடந்தது.
தற்போது முதல் மூன்று வேட்பாளர்களும் கவனிப்பு செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது. தேர்தல் அதிகாரிகளின் கெடுபிடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் போடியில் வார்டு தோறும் பூத் சிலிப் வழங்கும் பணி நடக்கிறது. போடி உதவி தேர்தல் அதிகாரி கருப்பசாமி கோயில் வழியாக சென்ற போது வாகனத்தை நிறுத்தி, ரோட்டில் வந்த ஒரு மூதாட்டியிடம்,'பூத் சிலிப் வாங்கிட்டீங்களா என விசாரித்தார்.
அவர் கேட்டவுடன் கட்சிக்காரர் தான் என நினைத்து, அந்தப் பெண்,' அய்யா ... சிலிப் மட்டும்தான் கொடுத்தாங்க பணம் ஏதும் கொடுக்கலையே .... நீங்க கொஞ்சம் சொல்லி வாங்கி தர ஏற்பாடு செய்யுங்க சாமி' என்றார். அதிர்ச்சி அடைந்த தேர்தல் உதவி அதிகாரி ஆளை விட்டா போதும் என காரில் ஏறி அங்கிருந்து வேகமாக சென்றார்.