/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெண்ணிடம் தரக்குறைவாக நடந்த ஆட்டோ டிரைவர்
/
பெண்ணிடம் தரக்குறைவாக நடந்த ஆட்டோ டிரைவர்
ADDED : ஆக 27, 2024 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு, : மூணாறு நகரில் நடந்து சென்ற பெண்ணிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட ஆட்டோ டிரைவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
மூணாறு அருகே சிவன்மலை எஸ்டேட் பழைய மூணாறு டிவிஷனைச் சேர்ந்த பெண் நகரில் டாக்சி ஸ்டாண்ட் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மர்ம நபர் ஒருவர் பெண்ணிடம் தரக்குறைவாக நடந்து கொண்டார்.
பெண் பலத்த கூச்சலிட்டதால் மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார்.
மூணாறு போலீசார் நடத்திய விசாரணையில் சம்பந்தப்பட்ட நபர் போதமேடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் என தெரியவந்தது.
சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு நடத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.

