/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெட்ரோல், டீசல் விலை குறைப்பது உறுதி பிரசாரத்தில் தங்கதமிழ்செல்வன் பேச்சு

ADDED : மார் 30, 2024 04:21 AM
தேனி : 'இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால் முதல்வர் ஸ்டாலின் கூறியது போல், சமையல் காஸ் ரூ.500, பெட்ரோல் லிட்டர் ரூ.75, டீசல் ரூ.65 க்கு கிடைப்பது உறுதி' என, தேனி ஊஞ்சாம்பட்டி பிரசாரத்தில் தி.மு.க, வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் பேசினார்.
நேற்று அவர் பெரியகுளம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஊஞ்சாம்பட்டி, வடபுதுப்பட்டி, லட்சுமிபுரம் பகுதிகளில் ஓட்டு சேகரித்து பேசியதாவது:
லோக்சபா தேர்தலில் இண்டியா கூட்டணிதான் வெற்றி பெறும்.
ஆட்சிமாற்றம் ஏற்படும். இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால் முதல்வர் ஸ்டாலின் கூறியது போல சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.500 என குறைக்கப்படும். பெட்ரோல் லிட்டர் ரூ.75க்கும், டீசல் ரூ.65க்கு வழங்கப்படும். மகளிர் உரிமைத் தொகை கிடைக்கப் பெறாதவர்களுக்கு விரைவில் வழங்கப்படும். தேர்தலுக்காக மோடி அடிக்கடி தமிழகம் வந்து செல்கிறார்.
இதனால் ஒரு பயனும் இல்லை என பேசினார்.
பிரசாரத்தில் எம்.எல்.ஏ., சரவணக்குமார், தேனி நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா, தி.மு.க., நகர செயலாளர் நாராயணபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.