/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரோட்டோரத்தில் திடீர் தீ ; வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை
/
ரோட்டோரத்தில் திடீர் தீ ; வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை
ரோட்டோரத்தில் திடீர் தீ ; வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை
ரோட்டோரத்தில் திடீர் தீ ; வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை
ADDED : ஏப் 01, 2024 11:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார் : கடுமையான வெப்பத்தால் ரோட்டோரத்தில் ஏற்படும் திடீர் தீயினால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடுமையான வெப்பம் காரணமாக ரோட்டோரத்தில் உள்ள செடிகள் கருகின. கூடலுார் காஞ்சிமரத்துறை, பளியன்குடி செல்லும் ரோட்டில் பல இடங்களில் செடிகள் காய்ந்து திடீரென தீப்பிடித்து எரிகின்றன. பலத்த காற்று வீசுவதால் ரோடு வரை பரவும் தீயினால் வாகனங்களில் செல்பவர்களுக்கு விபத்து அபாயம் உள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் எச்சரிகையுடன் செல்ல போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இது தவிர கூடலுார் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களிலும் தீப் பிடிப்பது அதிகரித்துள்ளன.