/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வேட்பாளர்கள் செலவு கணக்குகள் ஒப்படைப்பு
/
வேட்பாளர்கள் செலவு கணக்குகள் ஒப்படைப்பு
ADDED : ஏப் 03, 2024 07:18 AM

தேனி : கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் செலவீன பார்வையாளர் தரம்வீர் தண்டி தலைமையில் வேட்பாளர்கள் செலவு கணக்குகள் சமர்ப்பிக்கும் பணி நடந்தது.
இதில் தேனி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவு கணக்குகள், வீடியோ பதிவு குழு கொடுத்துள்ள கணக்குகளை ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட்டன.
செலவுகளை சரியாக பதிவு செய்ய வேட்பாளர்கள், முகவர்களிடம் பார்வையாளர் அறிவுறுத்தினார். கலெக்டர் நேர்முக உதவியாளர் முகமது அலி ஜின்னா, கருவூலத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'தேர்தலுக்கு முன் 3 முறை தேர்தல் செலவுகள் பற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கை வீடியோ குழு அறிக்கையும் சேர்த்து சரிபார்க்கப்பட்டு கணக்கிடப்படும்,' என்றனர்.

