/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விதைப்பந்து தயாரித்து, மரக்கன்றுகள் நட மாணவர்களுக்கு பயிற்சி சூழல் பாதுகாப்பில் சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி
/
விதைப்பந்து தயாரித்து, மரக்கன்றுகள் நட மாணவர்களுக்கு பயிற்சி சூழல் பாதுகாப்பில் சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி
விதைப்பந்து தயாரித்து, மரக்கன்றுகள் நட மாணவர்களுக்கு பயிற்சி சூழல் பாதுகாப்பில் சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி
விதைப்பந்து தயாரித்து, மரக்கன்றுகள் நட மாணவர்களுக்கு பயிற்சி சூழல் பாதுகாப்பில் சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி
ADDED : ஆக 12, 2024 04:16 AM
பெரியகுளம் ஒன்றியம் சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை 1800 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி நுழைவு வாயிலில் இருந்து இரு புறங்களிலும் மரங்கள் வளர்ந்துள்ளன.
இப்பள்ளி வளாகத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவாக மாணவ, மாணவிகள் கூட்டு முயற்சியில் 'அடர் குறுவனம்' அமைக்கப்பட்டுள்ளது. இவ்வனத்தில் சிட்டுக்குருவிகள் கூடு கட்டி வாழ்கின்றன.
குயில்கள் கூவ, மைனா உட்பட பறவைகளின் 'ரீங்காரங்கள்' இடை விடமால் கேட்டுக் கொண்டிருக்கின்றன. ஆசிரியர்கள் ஓய்வு நேரங்களில் இங்குள்ள திடலில் 15 நிமிடம் அமர்ந்து தங்களை புத்துணர்வு செய்து கொள்கின்றனர்.
இப்பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பங்களிப்புடன் 25 மர வகைகள் சேர்ந்த 3,000 மரக்கன்றுகள் நடப்பட்டு, பெரியகுளம் தாலுகாவில் முதல் அடர் குறுவனக்காடு உருவாக்கப்பட்டு, இயற்கை சூழல் பாதுகாப்பிற்கு பிற பள்ளிகளுக்கு உதாரணமாக திகழ்கிறது. வரும் ஆக.,15 சுதந்திர தினத்தன்று மேலும் மரக்கன்றுகள் நட ஆயத்தமாகி வருகின்றனர்.
இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் கல்வி அறிவுடன், விதைப்பந்து தயாரிப்பு, மரக்கன்றுகள் வளர்த்தல் உட்பட பிற அறிவுசார் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விதைக்கப்படும் விவசாய அறிவு
கலைச்செல்வி, தலைவர் பசுமைப்படை: வேம்பு, நாவல், சப்போட்டா, புங்கை, புளி மரங்களுக்கான நூற்றுக்கணக்கான விதைப்பந்துகளை தயார் செய்து, சில்வார்பட்டி, நாகம்பட்டி, வேல்நகர், நல்லகருப்பன்பட்டி, கதிரப்பன்பட்டி கிராமங்களில் வயல்வெளி, வேலி ஓடை, கால்வாயில் வளரும் இடத்தில் விதை பந்துகள் மாணவர்கள் மூலம் வீசப்பட்டு உள்ளன.
ஏராளமான விதை பந்துகள் முளைத்துள்ளன. இதன் மூலம் சூழல் பாதுகாப்பு குறித்தும், விவசாய அறிவும், கல்வி அறிவும் பலப்படுகிறது. இதனால் எங்கள் பள்ளி சூழல் பாதுகாப்பில் மாவட்ட முதன்மை பள்ளியாகவும், முன்னுதாரண பள்ளியாகவும் திகழ்கிறது., என்றார்.
விழிப்பு ணர் வு ஊர்வலம்
பாண்டியன், தலைமை ஆசிரியர்: அனைவரது கூட்டு முயற்சியில் குறுவனக்காடு சோலைவனமாக உள்ளது. எனது அறையில் இயற்கை வனம் குறித்து சுவரில் வரையப்பட்டுள்ளது. இதே போல் ஓரளவு குறுவனக்காட்டினை கொண்டு வர வேண்டும் என நினைத்துள்ளோம். இயற்கை சூழல் தினம் உட்பட முக்கிய நாட்களில் பசுமை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம், கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி நடத்தி ஊக்குவிக்கிறோம்.
குறுவனக்காட்டில் மூன்று அடிக்கு ஒன்று வீதம் இடைவெளியில் மாணவ, மாணவிகள் சந்தனம், நாவல், பூவரசு, நெல்லி, பெருநெல்லி, நிலவேம்பு, மா, தேக்கு, மலை வேம்பு, மருதம், செம்மரம், கொய்யா, தென்னை உட்பட 25 மர வகைகள் 3,000க்கும் அதிகமான மரக்கன்றுகளை நடவு செய்யப்பட்டு அவைகள் மரங்களாக செழித்து வளர்ந்துள்ளன. இச்சூழலில் படிப்பதால் மாணவர்களின் படிக்கும் திறன் மேம்படுகிறது., என்றார்.

