sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

42 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட சாக்கலுாத்து மெட்டு ரோடு திட்டம் தேர்தல் வாக்குறுதியளிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

/

42 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட சாக்கலுாத்து மெட்டு ரோடு திட்டம் தேர்தல் வாக்குறுதியளிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

42 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட சாக்கலுாத்து மெட்டு ரோடு திட்டம் தேர்தல் வாக்குறுதியளிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

42 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட சாக்கலுாத்து மெட்டு ரோடு திட்டம் தேர்தல் வாக்குறுதியளிக்க விவசாயிகள் வலியுறுத்தல்


ADDED : ஏப் 13, 2024 02:26 AM

Google News

ADDED : ஏப் 13, 2024 02:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி : தமிழக, கேரளாவை இணைக்கும் வழித்தடமான தேவாரம் சாக்கலூத்து மெட்டு ரோடு திட்டம் 42 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளதை தேர்தல் வாக்குறுதியாக இடம் பெற வேண்டும் என தமிழக, கேரளா விவசாயிகள், சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழக, கேரளாவை இணைக்கும் வகையில் குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு அமைந்துள்ளது.

இதுபோல தேவாரம் சாக்கலூத்து மெட்டு ரோடுக்கான திட்டமும் உள்ளது. போடி, தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம் உட்பட 50 மேற்பட்ட கிராம மக்கள் மட்டுமின்றி, கேரளா பகுதியான நெடுங்கண்டம், கட்டப்பனை, உடும்பஞ்சோலை, புளியமலை, பாம்பாடும்பாறை உள்ளிட்ட பகுதி விவசாயிகள், சுற்றுலா பயணிகளும் பயன் பெறும் வகையில் உள்ளது.

கேரளா பகுதியான நெடுங்கண்டத்திற்கு தேவாரத்தில் இருந்து 50 கி.மீ., தூரம் சுற்றிச் செல்ல வேண்டும். உடும்பஞ்சோலை செல்வதற்கு 60 கி.மீ., தூரம் செல்ல வேண்டும். குறைந்தது 2 முதல் இரண்டரை மணி நேரம் ஆகும். மேட்டுப்பட்டியில் இருந்து சாக்கலூத்துமெட்டு வழியாக நெடுங்கண்டத்திற்கு 22 கி.மீ., தூரத்தில் அரை மணி நேரத்தில்சென்று விடலாம். இதன் மூலம் 38 கி.மீ., தூரம் குறைவதோடு,ஒன்றரை மணி நேரம் குறைகிறது.

ஆனால் தமிழக பகுதியான டி. மேட்டுப்பட்டி அடிவாரத்தில் இருந்து 4 கி.மீ., தூரம் உள்ள சாக்கலூத்துமெட்டு செல்ல ரோடுக்கான பாதை இருந்தும், ரோடு வசதி இன்றி உள்ளது. தேவாரத்தில் இருந்து சாக்கலூத்துமெட்டுக்கு ரோடு அமைக்க அடிக்கல் நாட்டி 42 ஆண்டுகள் ஆகியும் திட்டம் கிடப்பில் உள்ளது. இதனால் தமிழக, கேரளா பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மட்டும் இன்றி, சுற்றுலா பயணிகளும் பல்வேறு வகையில் சிரமம் அடைந்து வருகின்றனர். இத்திட்டத்தை செயல்படுத்த கோரி தேவாரத்தில் வர்த்தகர்கள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம், கடை அடைப்பு போராட்டம் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் திட்டம் கிடப்பில் உள்ளன.

கிடப்பில் போடப்பட்ட தேவாரம் - சாக்கலூத்துமெட்டு ரோடுக்கான திட்டத்தை செயல்படுத்தும் வகையில் இத்தேர்தலில் வேட்பாளர்களின் வாக்குறுதியாக வழங்க தமிழக, கேரளா விவசாயிகள், சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us