/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் டிராபிக் சிக்னலை மறைத்து வழிகாட்டி பலகை
/
தேனியில் டிராபிக் சிக்னலை மறைத்து வழிகாட்டி பலகை
ADDED : மார் 28, 2024 06:44 AM

தேனி: தேனி நேரு சிலை அருகே சிக்னல் உள்ளது. இந்த சிக்னலில் மதுரை ரோடு, கம்பம் ரோடு, பெரியகுளம் ரோடுகள் சந்திக்கின்றன. நகரின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதில் இந்த சிக்னல் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் கம்பம் ரோட்டில் இருந்து வருபவர்கள் மதுரை, பெரியகுளம், திண்டுக்கல் செல்வதற்கான வழித்தெரியாமல் பலர் பாதை மாறி சென்றனர். இதனை தவிர்க்க மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் வழிகாட்டி பலகை வைக்கப்பட்டது.
ஆனால் அந்த வழிகாட்டி பலகை வைப்பதற்கான இரும்பு துாண் டிராபிக் சிக்னலை மறைத்துள்ளது.
இதனால் கம்பம் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் ரோட்டின் வலது புறம் நின்றால் சிக்னல் தெரிவது சிரமமாக உள்ளது. அதிகாரிகள் சிக்னல் கம்பத்தை வழிகாட்டி பலகை துாணிற்கு முன் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

