/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
100 சதவீத ஓட்டளிக்க கோரி உறுதிமொழி, ஊர்வலம்
/
100 சதவீத ஓட்டளிக்க கோரி உறுதிமொழி, ஊர்வலம்
ADDED : மார் 23, 2024 06:09 AM

தேனி: தேர்தல் ஆணையம் சார்பில் 100 சதவீத ஓட்டளிப்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தேர்தலில் திருநங்கைகள் உள்பட அனைவரும் கட்டாயம் ஓட்டளிக்க வலியுறுத்தியும். தேனி நகராட்சிக்குட்பட்ட வள்ளிநகரில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் நடந்தது.
அதில் அப்பகுதியில் வசிக்கும் திருநங்கைகள் பங்கேற்றனர். நகராட்சி அலுவலகத்தில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் வரை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. துண்டு பிரசுரங்கள் சாலை ஓர வியாபாரிகள்,பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் ரூபன் சங்கர் ராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் ஷியாமளாதேவி, நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர்பாஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் இருந்து மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் 113 பேருக்கு ஓட்டளிக்க வலியுறுத்தி கடிதங்களை தேர்தல் நடத்தும் அலுவலர் அனுப்பினார்.

