/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மின் உற்பத்தி செய்யும் லோயர்கேம்பில் மின்தடையால் பொதுமக்கள் அவதி
/
மின் உற்பத்தி செய்யும் லோயர்கேம்பில் மின்தடையால் பொதுமக்கள் அவதி
மின் உற்பத்தி செய்யும் லோயர்கேம்பில் மின்தடையால் பொதுமக்கள் அவதி
மின் உற்பத்தி செய்யும் லோயர்கேம்பில் மின்தடையால் பொதுமக்கள் அவதி
ADDED : மே 17, 2024 06:52 AM
கூடலுார் : மின் உற்பத்தி செய்யும் லோயர்கேம்பில் அடிக்கடி ஏற்படும் மின் தடையால் மக்கள் அவதிப்பட்டுள்ளனர்.
கூடலுார் 21 வது வார்டாக உள்ளது லோயர்கேம்ப். கேரள எல்லையோரத்தில் அமைந்துள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் இங்கு 4 ஜெனரேட்டரில் தலா 42 மெகாவாட் வீதம் 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இது தவிர முல்லைப் பெரியாற்றில் குருவனத்துப்பாலம், வெட்டுக்காடு, காஞ்சிமரத்துறை, குள்ளப்பகவுண்டன்பட்டி ஆகிய இடங்களில் மினி பவர்ஹவுஸ் அமைக்கப்பட்டுள்ளது.
மின் உற்பத்தி செய்யும் இடமான லோயர்கேம்பில் அடிக்கடி பல மணி நேரம் தொடர்ந்து மின்தடை ஏற்படுகிறது. மின்வாரிய குடியிருப்பு, குடிநீர் திட்ட பம்பிங் ஸ்டேஷனில் மட்டும் மின்தடை ஏற்படவில்லை. காலனி, கார் நிலையதெரு ஆகிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மின்தடை அதிகமாக உள்ளது. குள்ளப்பகவுண்டன்பட்டி மினி பவர் கவுசில் இருந்து லோயர்கேம்பிற்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. இதை மாற்றி கம்பத்திலிருந்து வழங்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.