ADDED : ஏப் 01, 2024 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடமலைக்குண்டு : தேனி அருகே அரண்மனைபுதுாரைச் சேர்ந்தவர் தாமோதர கண்ணன் 39, இவர் தனது மனைவி ஜெயலட்சுமி, மகன் மிதுன் 8, ஆகியோருடன் கடமலைக்குண்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் அரண்மனை புதுார் சென்றார். அண்ணா நகர் அய்யனார் கோயில் அருகே சென்ற போது இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.
தலையில் பலத்த காயம் அடைந்த தாமோதரகண்ணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். மகன் மிதுன் காயம் அடைந்தார். ஜெயலட்சுமி கொடுத்த புகாரில் கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

