/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பணி ஆணை அனுப்பும் பணி துவக்கம்
/
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பணி ஆணை அனுப்பும் பணி துவக்கம்
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பணி ஆணை அனுப்பும் பணி துவக்கம்
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பணி ஆணை அனுப்பும் பணி துவக்கம்
ADDED : மார் 23, 2024 06:04 AM

தேனி: லோக்சபா தேர்தலில் பணிபுரிய உள்ள ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பணி ஆணை அனுப்பும் பணி நேற்று நடந்தது.
லோக்சபா தேர்தல் ஏப்.,19ல் நடக்கிறது. தேனி லோக்சபா தொகுதியில் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
இதில் தேனி மாவட்டத்தில் மட்டும் ஆண்டிப்பட்டி, பெரியகுளம்(தனி), போடி, கம்பம் உள்ளிட்ட சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 1225 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன.
இம் மையங்களில் தேர்தலின் போது மாநில அரசு துறைகளைச்சேர்ந்த 6100 பேர் பணிபுரிய உள்ளனர்.
இவர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் தேர்தல் பணி ஆணை சான்றிதழ் அனுப்பும் பணி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.இச்சான்றிதழ்கள் துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பபடுகிறது.
அவர்கள் மூலம் பணிபுரிய உள்ளவர்களுக்கு ஆணை வழங்கப்பட உள்ளது.
தேர்தல் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு ஆண்டிபட்டியில் வேளாங்கண்ணிமாதா மெட்ரிக் பள்ளி, போடி இசட்.கே.எம்., மெட்ரிக் பள்ளி, பெரியகுளம் தாலுகாவிற்கு தேனி மதுரை ரோடு மேரிமாதா மெட்ரிக் பள்ளி, தேனி தாலுகாவிற்கு வீரபாண்டி சவுராஷ்டிரா கல்லுாரி, கம்பம் தாலுகாவிற்கு உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லுாரி உள்ளிட்ட இடங்களில் நாளை முதல்கட்ட பயிற்சி நடைபெறுகிறது.

