/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் வாகனங்கள் நீண்டநேரம் அணிவகுத்ததால் பயணிகள் அவதி
/
தேனியில் வாகனங்கள் நீண்டநேரம் அணிவகுத்ததால் பயணிகள் அவதி
தேனியில் வாகனங்கள் நீண்டநேரம் அணிவகுத்ததால் பயணிகள் அவதி
தேனியில் வாகனங்கள் நீண்டநேரம் அணிவகுத்ததால் பயணிகள் அவதி
ADDED : செப் 17, 2024 05:42 AM

தேனி : தேனி புதுபஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை ரோட்டிற்கு செல்லும் திட்ட சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பயணிகள், பொதுமக்கள் அவதியடைந்தனர்.
தேனி நகர்பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரயில்வே மேம்பால பணிகள் நடந்து வருகிறது.
இதற்காக தேனி நகர்பகுதியில் இருந்து மதுரை ரோட்டில் செல்லும் வாகனங்கள் அரண்மனைப்புதுார் விலக்கு பகுதியில் இருந்து புது பஸ் ஸ்டாண்ட், அரசு ஐ.டி.ஐ., வழியாக மதுரை ரோடு செல்ல அறிவுறுத்தப்பட்டிருந்தது. மறுமார்க்கத்திலும் இதே போல் வந்த செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று ஆண்டிபட்டியில் இருந்து புது பஸ் ஸ்டாண்டிற்கு வந்த டவுன்பஸ் நடுரோட்டில் பழுதாகி நின்றது.
இதனால் கலெக்டர் அலுவலகம் செல்லும் ரோடு, நான்கு ரோடு சந்திப்பு வரை ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் விலகி செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.
இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு நீண்ட துாரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இரு மாதங்களுக்கு முன் கலெக்டர் ஆபீஸ் ரோட்டில் ஆக்கிரமிப்பு முறையாக அகற்றாமல் கண்துடைப்பு நடவடிக்கை மேற்கொண்டதால் நெரிசல் தொடர்கிறது.
இந்த ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்கள் நிறுவத்துவது, பஸ்கள் இடையூறாக நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவது தொடர்கிறது.
இதனால் வாகனங்கள் நேற்று பல கி.மீ., துாரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன.
இந்த வழியாக பயணிப்போர், அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
போக்குவரத்து இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், பாரபட்சம் இன்றி ஆக்கிரமிப்பு அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

