ADDED : மே 17, 2024 06:54 AM

தேனி : ஆண்டிபட்டியில் பகுதிகளில் டிரான்ஸ்பார்மர் பழுதால் அடிக்கடி ஏற்படும் மின்தடைதய சீரமைக்க கோரி விவசாயிகள், பொது மக்கள் மேற்பார்வவை பொறியாளரிடம் மனு அளித்தார்.
ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பொது மக்கள் தேனி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சகாயராஜிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது: திருமலாபுரம் ஊராட்சி பந்துவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, பாலசமுத்திரம், மரிக்குண்டு ஊராட்சி சண்முகசுந்தரபுரம் ஊராட்சியில் ரோசனம்பட்டி, முத்துசங்கலிபட்டி பகுதிகளுக்கு ஆண்டிபட்டி மேற்கு துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டது. ஓராண்டுக்கு முன் வினியோகம் நிறுத்தப்பட்டு, கண்டமனுார் துணை மின் நிலையத்தில் இருந்து வழங்கப்படுகிறது. இதற்கு முன் காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை வழங்கப்பட்ட மின் வினியோகம் தடை செய்து அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் விவசாய மின்மோட்டார்கள் பழுதாகி ஒவ்வொருவருக்கும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக அடிக்கடி தொடர்ந்து இரவு, பகல் முழுவதும் மின் தடை ஏற்படுகிறது. எனவே, ஆண்டிபட்டி, க.விலக்கு மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க கோரினர். மனுவை பரிசீலித்த மேற்பார்வை பொறியாளர், ஒரு மாதத்திற்குள் பழுதடைந்த டிரான்ஸ்பார்மர்களை மாற்றி, மின் வினியாகம் வழங்கப்படும்' என உறுதி அளித்தார். பின் அனைவரும் கலைந்து சென்றனர்.

