/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கூடைப்பந்து லீக் சுற்றில் நான்கு அணிகள் வெற்றி
/
கூடைப்பந்து லீக் சுற்றில் நான்கு அணிகள் வெற்றி
ADDED : மே 19, 2024 05:25 AM
-பெரியகுளம் : கேரள மின்வாரியம், இந்தியன் வங்கி, வருமானவரித்துறை, விளையாட்டு விடுதி அணிகள் வெற்றி பெற்றன.
பெரியகுளம் பி.டி.சிதம்பர சூரிய நாராயணன் நினைவு அகில இந்திய கூடைப்பந்து போட்டி நாக் அவுட் மற்றும் லீக் சுற்று போட்டிகளாக நடந்து வருகிறது.
நேற்று காலை நடந்த போட்டியில் திருவனந்தபுரம் கேரள மாநில மின்வாரியம் அணியும், சென்னை ஐ.சி.எப்., அணியும் மோதியது. கேரள மாநில அணி 71:62 புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.
சென்னை இந்தியன் வங்கி அணியும், சென்னை எஸ். பி.ஓ.ஏ., முன்னாள் மாணவர்கள் கூடைப்பந்து அணியும் மோதியது.
இந்தியன் வங்கி அணி 72:57 புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. சென்னை விளையாட்டு விடுதி அணியும், புதுடில்லி
மாநில கூடைப்பந்து அணியும் மோதியதில் விளையாட்டு விடுதி அணி 79:77 புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. சென்னை வருமானவரித்துறை அணியும், திருநெல்வேலி பி.ஏ.கே.கே. அணியும் மோதியது. இதில் வருமானவரித்துறை அணி 53:46 புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.-

