/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பழி வாங்கும் நடவடிக்கை தொடர்ந்தால் டிரைவர்கள் போராட்டம் நடத்த முடிவு
/
பழி வாங்கும் நடவடிக்கை தொடர்ந்தால் டிரைவர்கள் போராட்டம் நடத்த முடிவு
பழி வாங்கும் நடவடிக்கை தொடர்ந்தால் டிரைவர்கள் போராட்டம் நடத்த முடிவு
பழி வாங்கும் நடவடிக்கை தொடர்ந்தால் டிரைவர்கள் போராட்டம் நடத்த முடிவு
ADDED : மார் 04, 2025 05:45 AM
மூணாறு: மூணாறில் டாக்சி டிரைவர்களுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் கைவிடவில்லை என்றால் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப் போவதாக கே.டி.எச்.பி. டாக்சி டிரைவர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
அச்சங்கத்தின் தலைவர் நாராயணசாமி, பொது செயலாளர் சுமேஷ்குமார், செயலாளர் பழனிசாமி, பொருளாளர் மணிகண்டன் ஆகியோர் கூறியதாவது:
போக்குவரத்து துறை அமைச்சர், மோட்டார் வாகன துறை அதிகாரிகள் ஆகியோர் கடந்த ஒரு மாதமாக டாக்சி டிரைவர்களுக்கு எதிராக பழிவாங்கும் நோக்கத்தில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதனால் டிரைவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
' டபுள் டெக்கர்' பஸ்க்கு டிரைவர்கள் எதிர்ப்பு மட்டும் தெரிவித்தனர். அமைச்சருக்கு கருப்பு கொடி காட்டிய காரணத்திற்காக, நான்கு சுற்றுலா பஸ்களை இயக்கியதுடன் அதிகாரிகள் மூலம் வாகன சோதனை என்ற பெயரில் ரூ.லட்ச கணக்கில் அபராதம் விதித்து பழிவாங்கும் நடவடிக்கை நடந்து வருகிறது.
அப்பிரச்னையில் எம்.எல்.ஏ. உள்பட மக்கள் பிரதிநிதிகள் மவுனம் காத்து வருகின்றனர்.
கேரளாவில் தேக்கடி, வாகமண், வயநாடு, குமரகம் உள்பட பிற சுற்றுலா பகுதிகளில் சுற்றுலா பஸ்கள் இயக்கப்படவில்லை. மூணாறில் மட்டும் இயக்கப்படுகிறது.
சுற்றுலா பஸ்கள் இயக்குவதை மறு பரிசீலனை செய்து, அதிகாரிகள் நடத்தும் வாகன சோதனையை கைவிடவில்லை என்றால் ஆட்டோ, கார் உள்பட அனைத்து டாக்சி டிரைவர்களையும் திரட்டி வேலை நிறுத்தம் உள்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும், என்றனர்.

