/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தி.மு.க., அ.தி.மு.க., ஓட்டுகளுக்கு குறி: அ.ம.மு.க.வின் அசத்தல் தேர்தல் வியூகம்
/
தி.மு.க., அ.தி.மு.க., ஓட்டுகளுக்கு குறி: அ.ம.மு.க.வின் அசத்தல் தேர்தல் வியூகம்
தி.மு.க., அ.தி.மு.க., ஓட்டுகளுக்கு குறி: அ.ம.மு.க.வின் அசத்தல் தேர்தல் வியூகம்
தி.மு.க., அ.தி.மு.க., ஓட்டுகளுக்கு குறி: அ.ம.மு.க.வின் அசத்தல் தேர்தல் வியூகம்
ADDED : ஏப் 13, 2024 02:27 AM
கம்பம், : 'தி.மு.க., அ.தி.மு.க.,வின் ஓட்டுக்களை குறிவைத்து அ.ம.மு.க., வினர் திட்டமிட்ட தேர்தல் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி லோக்சபா தொகுதியில் உச்சகட்ட பிரசாரம் நடந்து வருகிறது. வெற்றி கனியை பறிக்க பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். பிரசாரம், ஒட்டுக்களை கவர்வது, வெற்றி பெறுவதை இலக்காக கொண்டு அ.ம.மு.க களம் இறங்கியுள்ளது.
மற்ற வேட்பாளர்கள் பிரசாரம் செய்கின்றனர். ஆனால் அ.ம.மு.க. வேட்பாளர் ஒரு படி மேல் போய் களப்பணியாற்றி வருகிறார்.
அதாவது ஒரு வார்டுக்கு 3 பெண்கள், 8 ஆண்கள், ஒரு மேற்பார்வையாளர் என 12 பேர் வெளி மாவட்டத்தினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தங்க வீடு, சாப்பாடு, பேட்டா தரப்படுகிறது. இவர்கள் தினமும் காலையில் எழுந்து நாள் முழுவதும் வார்டுக்குள் கேன்வாஸ் செய்கின்றனர். பெண்கள் பார்த்து, உங்கள் வீட்டில் எத்தனை ஒட்டுக்கள் உள்ளது. ஒரு ஒட்டு எங்களுக்கு போடுங்கள் என்று கேட்கின்றனர்.
ஒரு ஊரில் எத்தனை வார்டுகள் உள்ளதோ, அத்தனை வார்டுகளிலும் வீடு எடுத்து தங்கி தேர்தல் பணி செய்கின்றனர்.
கட்சி நிர்வாகிகளுக்கும் இவர்கதைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. கட்சியின் பிரசாரம், கவனிப்பு வேறு . இவர்கள் பணி வேறு.
தி.மு.க. அ.தி.மு.க. ஒட்டு வங்கிகளை குறிவைத்து இந்த சிறப்பு படையினர் செயல்படுகின்றனர். டெல்டா மாவட்டங்களிலிருந்து இறங்கியுள்ள இந்த சிறப்பு படையின் ஆட்டம் தேர்தலில் நல்ல பலனை தரும் என்கின்றனர்.

