/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கனமழையை எதிர்கொள்ள 66 தற்காலிக முகாம்கள் தயார்
/
கனமழையை எதிர்கொள்ள 66 தற்காலிக முகாம்கள் தயார்
ADDED : மே 17, 2024 06:55 AM
தேனி : தேனி மாவட்டத்திற்கு மே 20 வரை கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதற்காக 66 இடங்களில் தற்காலிக முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தேனி உட்பட மேற்கு தொடர்ச்சி மலை அருகே அமைந்துள்ள சில மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. அதிகாரிகள் கூறியதாவது, தேனி மாவட்டத்திற்கு மே 19 வரை மிக கன மழையும், மே 20ல் அதிகன மழை பெய்யும் என எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. வெள்ளம், மண் சரிவால் பாதிக்கப்பட கூடிய 43 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தால் பொதுமக்களை தங்க வைக்க தாலுகா வாரியாக தேனி 5, பெரியகுளம் 7, ஆண்டிப்பட்டி 13, உத்தமபாளையம் 9, போடி 9 என மொத்தம் 43 இடங்களில் 66 முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நீர்நிலைகள், பாதிக்கப்பட கூடிய இடங்களை தொடர்ந்து கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மழையினால் அசம்பாவிதங்கள் நடந்தாலோ , உதவி தேவைப்பட்டாலோ பொதுமக்கள் இலவச அலைபேசி எண் 1077 மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலக எண் 04546- 250101 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். பொதுமக்கள் குளிக்க, துவைக்க நீர் நிலைக்களுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

