/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நிழற்கூரை இன்றி தேனி பழைய பஸ் ஸ்டாண்டில்பயணிகள் அவதி
/
நிழற்கூரை இன்றி தேனி பழைய பஸ் ஸ்டாண்டில்பயணிகள் அவதி
நிழற்கூரை இன்றி தேனி பழைய பஸ் ஸ்டாண்டில்பயணிகள் அவதி
நிழற்கூரை இன்றி தேனி பழைய பஸ் ஸ்டாண்டில்பயணிகள் அவதி
ADDED : மார் 28, 2024 06:43 AM

தேனி: தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் நிழற்கூரை வசதி இன்றி பயணிகள் அவதிக்குள்ளாகுகின்றனர்.
தேனி பழைய பஸ் ஸ்டாண்டு மதுரை கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. தேனி பென்னிகுவிக் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து கம்பம், குமுளி, போடி, மூணாறு செல்லும் பஸ்கள், அப்பகுதியில் இருந்து இயக்கப்படும் பஸ்களும் பழைய பஸ் ஸ்டாண்டில் நின்று பயணிகளை இறக்கி, ஏற்றி செல்கின்றன. இங்கிருந்து பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு டவுன்பஸ்களும் இயக்கப்படுகின்றன.பழைய பஸ் ஸ்டாண்டில் ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றம் என கூறி சில மாதங்களுக்கு முன் நிழற்கூரைகள் அகற்றப்பட்டன. இதனால் இங்கு வரும் பயணிகள் கடும் வெயிலில் காத்திருக்கும் நிலை உள்ளது. தினமும் அதிகரிக்கும் வெயில் தாக்கத்தால் குழந்தைகளுடன் வருபவர்கள், முதியோர் அவஸ்தைக்கு உள்ளாகுகின்றனர்.பழைய பஸ் ஸ்டாண்டில் பயணிகள் நிழற்கூரை அமைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அப்பகுதியில் உள்ள ராஜவாய்கால் ஆக்கிரமிப்பை விரைந்து அகற்றிட வேண்டும்.

