/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தமிழகத்திற்கான திட்டங்களை பிரதமர் மோடியிடம் பெற்று தருவேன் தேனி அ.ம.மு.க., வேட்பாளர் தினகரன் பிரசாரம்

ADDED : ஏப் 08, 2024 04:30 AM

கடமலைக்குண்டு : 'என்னை வெற்றி பெறச் செய்தால் உங்கள் ஊருக்கு மட்டுமல்ல தொகுதிக்கும், தமிழக வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை பிரதமர் மோடியிடம் பெற்றுத்தருவேன்' என தேனி தொகுதி, ஆண்டிபட்டி தாலுகா, கடமலைக்குண்டு அருகே குமணன்தொழு கிராமத்தில் அ.ம.மு.க., வேட்பாளர் தினகரன் பேசினார்.
கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை ஒன்றிய பகுதிகளுக்கு உட்பட்ட 20க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் நேற்று பிரசாரம் செய்தார். குமணன்தொழுவில் அவர் பேசியதாவது:
தி.மு.க., யாரை பிரதமராக கூறி ஓட்டு கேட்கிறது, பழனிசாமி யாரை பிரதமராக சொல்லி ஓட்டு கேட்பார். அவர்களுக்கு ஓட்டு போட்டாலும் அது வேஸ்ட். உங்களுக்கு உழைத்திட 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்துள்ளேன். மோடி பிரதமராக குக்கர் சின்னத்திற்கு ஓட்டளியுங்கள். வீட்டில் குக்கரை பார்த்தால் தினகரன் நினைவு வரவேண்டும். அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி என்ற செய்தியை நீங்கள் தர வேண்டும். எந்த கொம்பனாலும் இனி என்னை உங்களிடமிருந்து பிரிக்க முடியாது. ஆர்.கே., நகரில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டபோது பழனிசாமி என்னை ஜெயிக்க விடக்கூடாது என்ற எண்ணத்தில் ஓட்டுக்கு ரூ. 10 ஆயிரம் வழங்கினார். அப்பகுதி மக்கள் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் என்னை வெற்றி பெற வைத்தனர். இது குறித்து அவர்களிடம் கேட்டபோது,'அது யார் பணம் அவர்கள் அப்பன் வீட்டு பணமா, தவறான வழியில் சம்பாதித்த எங்கள் வரிப்பணத்தை கொடுத்தனர்', என்று தெரிவித்தனர். தற்போது 12 கட்சி கூட்டணியுடன் வேட்பாளராக வந்துள்ளேன். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும். போதை பொருட்கள் புழக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. குழந்தைகள், இளைஞர்களை பாதுகாக்க குக்கர் சின்னத்திற்கு ஆதரவு தாருங்கள், இவ்வாறு பேசினார்.