/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பல ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதால் வாக்காளர்கள் அவதி ஓட்டளிக்க உரிய ஆவணங்கள் பெற்று அனுமதி
/
பல ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதால் வாக்காளர்கள் அவதி ஓட்டளிக்க உரிய ஆவணங்கள் பெற்று அனுமதி
பல ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதால் வாக்காளர்கள் அவதி ஓட்டளிக்க உரிய ஆவணங்கள் பெற்று அனுமதி
பல ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதால் வாக்காளர்கள் அவதி ஓட்டளிக்க உரிய ஆவணங்கள் பெற்று அனுமதி
ADDED : ஏப் 20, 2024 06:11 AM
கம்பம்: பல ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுது ஏற்பட்டு தாமதம் நிலவியதால் வாக்காளர்கள் அவதி அடைந்தனர். ஓட்டளிக்க தேர்தல் ஆணையம் அறிவுருத்திய ஆவணங்களை பெற்று ஓட்டளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
தேனி தொகுதியில் லோக்சபா தேர்தலுக்கான ஒட்டுப் பதிவு நேற்று காலை 7:00 மணிக்கு துவங்கியது. நாராயணத்தேவன்பட்டி , கம்பம், சுருளிப்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட பல ஊர்களில் இயந்திரங்களில் பழுது ஏற்பட்டதால் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 15 நிமிடங்கள் ஓட்டுப் பதிவு தாமதமானது.
கம்பம்: அரசு கள்ளர் மேல் நிலைப்பள்ளி ஒட்டுச் சாவடி ஒன்றில் இரண்டாவது இயந்திரத்தை முதலாவதாகவும், முதல் இயந்திரத்தை இரண்டாவதாகவும் மாற்றி வைத்திருந்தனர். அங்கு வந்த தி.மு.க. வேட்பாளர் இயந்திரத்தை வரிசைப்படி வையுங்கள் என கூறி சென்றார். சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் ஒட்டு சாவடி எண் 91 ல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின்னணு இயந்திரத்தின் பழுதை சரி செய்ய முடியாததால் வேறு இயந்திரம் மாற்றப்பட்டது. சின்னமனூர் 53 வது ஓட்டுச்சாவடியில் இயந்திரம் பழுதாகி ஒட்டுப்பதிவு தாமதமானது.
கம்பம் அருகே அணைப்பட்டியில் ஒட்டுச்சாவடி ஒன்றில் பதிவான ஒட்டுக்கள் மொத்த எண்ணிக்கை காட்டததால், அதிகாரிகள் மண்டல அலுவலரை அழைத்து சரி செய்தனர். க. புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளி ஓட்டுச் சாவடியில் ஓட்டை பதிவு செய்யும் போது வரும் பீப் ஒலி சத்தம் ஒலிக்கவில்லை. 30 நிமிடங்கள் இந்த பிரச்னை இருந்துள்ளது. அதிகாரிகள் வந்து சரி செய்துள்ளனர்.
க.புதுப்பட்டியில் வடக்கு தெருவில் தி.மு.க., அ.தி.மு.க.வினருக்கு இடையே வாக்காளர்களை கேன்வாஸ் செய்வதில் தகராறு ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு கலைந்து போக செய்தனர். சரியான ஆலோசனை வழங்காததால் ஒவ்வொரு ஒட்டுச் சாவடியிலும் ஒவ்வொரு விதமான கெடுபிடிகளை அலுவலர்கள் மேற்கொண்டனர்.கம்பம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அலைபேசி கொண்டு வர அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். ஓட்டுச்சீட்டு வைத்திருந்தாலும் ஏதாவது ஒரு ஆவணத்தை காட்ட வலியுறுத்தினர். குறிப்பாக ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை பெற்று ஓட்டளிக்க அனுமதித்தனர்.
உத்தமபாளையம்: ஊராட்சி ஒன்றிய அலுவலக ஒட்டு சாவடியில் 25 க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒட்டு இல்லையென்றதால் வாக்குவாதம் ஏற்பட்டது.- இது போன்று பல ஊர்களிலும் இப் பிரச்னை இருந்தது.
காக்கில் சிக்கையள்பட்டியில் ஜெகதீஷ் 31 என்பவருக்கு ஒட்டு இல்லாததால், ஒட்டுச் சாவடிக்கு முன்பு அமர்ந்து தர்ணா செய்தார். போலீசார் அவரை சமாதானம் செய்தனர். ஒட்டுச் சாவடிகளுக்கு சென்ற அ.தி.மு.க. முகவர்கள் 30 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒட்டுப்பதிவை தங்கள் கட்சி மாவட்ட செயலாளருக்கு 'அப்டேட்' செய்து வந்தனர்.
பெரியகுளம்: பெரியகுளம் ஒன்றியம் தாமரைக்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 66 வது ஓட்டுச்சாவடி உள்ளது. இதில் 980 வாக்காளர்கள் உள்ளனர். இந்த ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்பதிவு இயந்திரம் 30 நிமிடம் பழுதானது. இதனால் வாக்காளர்கள் அவதிக்குள்ளாகினர். ஓட்டுச்சாவடி அலுவலர் பழுதை சரி செய்தபின் ஓட்டுப்பதிவு இயந்திரம் செயல்பட்டது.

