/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
தஞ்சை கோவில் சித்திரை விழா முகூர்த்தக்கால் நட்டு வழிபாடு
/
தஞ்சை கோவில் சித்திரை விழா முகூர்த்தக்கால் நட்டு வழிபாடு
தஞ்சை கோவில் சித்திரை விழா முகூர்த்தக்கால் நட்டு வழிபாடு
தஞ்சை கோவில் சித்திரை விழா முகூர்த்தக்கால் நட்டு வழிபாடு
ADDED : பிப் 09, 2024 01:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தஞ்சாவூர்:தஞ்சாவூர், பெரியகோவிலில் ஆண்டு தோறும், சித்திரைப் பெருவிழா 15 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு சித்திரை பெருவிழா ஏப்ரல் 6ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
தேரோட்டம் ஏப்ரல் 20ம் தேதி நடைபெறுகிறது. ஏப்ரல் 23ம் தேதி கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. இதையொட்டி, நேற்று காலை, பெரிய கோவில் வளாகத்தில், முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, முகூர்த்தக்கால் நடப்பட்டது.
இதில், அரண்மனை தேவஸ்தான உதவி கமிஷனர் கவிதா, கோவில் செயல் அலுவலர் மாதவன் உள்ளிட்ட கோவில் பணியாளர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.