/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் 120 சி.என்.ஜி., பஸ்கள் இயக்க திட்டம்

ADDED : நவ 27, 2025 01:42 AM
ராமநாதபுரம்: காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக அரசு வாகனங்களில் சி.என்.ஜி., எரிவாயு பயன்படுத்தும் முறை படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு பஸ்களிலும் டீசல் இன்ஜின், சி.என்.ஜி.,க்கு மாற்றப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ராமநாதபுரத்தில் இரு பஸ்களில் சி.என்.ஜி., இன்ஜின் மாற்றப்பட்டது. தற்போது வரை எவ்வித இடையூறும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இதனால் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் இயக்கப்படும் பஸ்களில் 120 பஸ்களின் டீசலுக்கு பதில் சி.என்.ஜி., பயன்படுத்த ராமநாதபுரம் ஏ.ஜி.பி., நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.கும்பகோணம் மண்டல மேலாண்மை இயக்குநர் தசரதன், ஏ.ஜி.பி., நிறுவன மண்டலத் தலைவர் இசக்கிமுத்து பூமாரி ஒப்பந்தத்தை பெற்றுக்கொண்டனர். ஏ.ஜி.பி., நிறுவனத்தினர் கூறியதாவது:
ராமநாதபுரத்தில் 12 தனியார் பஸ்கள் சி.என்.ஜி., எரிபொருளில் இயங்கி வருகின்றன. புதிய தொழில்நுட்பத்தில் பஸ்களின் இன்ஜின்கள் சி.என்.ஜி.,க்கு மாற்றப்படுகிறது. இதனால் குறைந்த செலவில் அதிக தொலைவு பயணிக்க முடியும் என்றனர்.