/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
மக்களிடம் நேர்மையை வளர்க்க திறக்கப்பட்ட ஆளில்லா கடை
/
மக்களிடம் நேர்மையை வளர்க்க திறக்கப்பட்ட ஆளில்லா கடை
மக்களிடம் நேர்மையை வளர்க்க திறக்கப்பட்ட ஆளில்லா கடை
மக்களிடம் நேர்மையை வளர்க்க திறக்கப்பட்ட ஆளில்லா கடை
ADDED : அக் 03, 2024 02:19 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் நேற்று, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ரோட்டரி சங்கம் சார்பில், கண்காணிக்க ஆளில்லா கடை திறக்கப்பட்டது.
இக்கடையை ரோட்டரி சங்கத்தின் முன்னாள் மாவட்ட ஆளுநர் ரமேஷ்பாபு, சங்க தலைவர் சக்திவேல், பாபநாசம் டி.எஸ்.பி., முருகவேலு திறந்தனர்.
இக்கடையில் வீட்டு உபயோகப் பொருட்கள், எழுதுபொருட்கள், தின்பண்டங்கள் ஆகியவை விலை அச்சிடப்பட்டு இருந்தன. அருகே ஒரு டப்பா வைக்கப்பட்டிருந்தது. பொருளை எடுத்தவர்கள், அதற்குரிய தொகையை டப்பாவில் வைத்தனர். அதிக பணம் வைத்தவர்கள், சரியான சில்லறையை எடுத்துக் கொண்டனர்.
ரோட்டரி சங்கத் தலைவர் சக்திவேல் கூறியதாவது:
இந்தியாவை நேர்மை, உண்மை, நாணயம், நம்பிக்கை கொண்ட ஒரு நாடாக உருவாக்க வேண்டும் என காந்தி கனவு கண்டார். அவரது கனவை, நினைவாக்கும் வகையில், காந்தி ஜெயந்தி நாளில் மட்டும் ஆண்டுதோறும் இந்த ஆளில்லா கடை திறக்கப்படுகிறது.
இந்தாண்டு, 25ம் ஆண்டாக, இந்த ஆளில்லா கடை திறக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடம் வாழ்க்கையில் நேர்மையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டது.
இக்கடையில், 7,500 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன. லாபம் நோக்கம் கிடையாது. விற்பனையாகும் தொகையை சேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

