ADDED : அக் 27, 2025 12:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து வாசுதேவநல்லூர் சென்ற அரசு டவுன் பஸ் கண்டிகைப்பேரி அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியதில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
சங்கரன்கோவில் பஸ் நிலையத்திலிருந்து புறப்பட்ட அரசு டவுன் பஸ் கண்டிகைப்பேரி அருகே சென்றபோது முன்பக்க பட்டை கட்டுகள் திடீரென உடைந்ததால் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பஸ் சாலை ஓரத்தில் ஓடி மின்கம்பத்தில் மோதியதுடன், அருகிலுள்ள சிறிய பள்ளத்தில் சரிந்தது. கண்டக்டர், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு, காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கரிவலம்வந்தநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

