/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
புள்ளிமான் வேட்டை டாக்டர் உட்பட 3 பேர் கைது தி.மு.க., செயலர் உட்பட ஏழு பேர் தலைமறைவு
/
புள்ளிமான் வேட்டை டாக்டர் உட்பட 3 பேர் கைது தி.மு.க., செயலர் உட்பட ஏழு பேர் தலைமறைவு
புள்ளிமான் வேட்டை டாக்டர் உட்பட 3 பேர் கைது தி.மு.க., செயலர் உட்பட ஏழு பேர் தலைமறைவு
புள்ளிமான் வேட்டை டாக்டர் உட்பட 3 பேர் கைது தி.மு.க., செயலர் உட்பட ஏழு பேர் தலைமறைவு
ADDED : செப் 02, 2025 05:28 AM

தென்காசி: விருந்து வைப்பதற்காக புள்ளிமானை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய ஓமியோபதி டாக்டர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இறந்த புள்ளிமான், இரண்டு துப்பாக்கிகள், கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஊத்துமலை வனப்பகுதியில் புள்ளிமான்கள் உள்ளன.
சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த சிலர் அடிக்கடி அங்கு வாகனங்களில் வந்து வேட்டையாடுவது வழக்கமாம்.
சங்கரன்கோவிலைச் சேர்ந்த தி.மு.க., இளைஞரணி பிரமுகர் முகேஷ் என்பவர் நண்பர்களுக்கு விருந்து கொடுப்பதற்காக புள்ளிமானை வேட்டையாட வந்துள்ளார்.
மூன்று வாகனங்களில் 10 பேர் கும்பல் நள்ளிரவில் ஊத்துமலை -ருக்மணியாபுரம் ரோட்டில் சுற்றினர்.
இதில் ஒரு வாகனம் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த பொன் ஆனந்த் 40, என்பவர் காயமுற்றார்.
ரோந்து வந்த போலீசார், புள்ளிமான் மற்றும் துப்பாக்கிகளுடன் இருந்தவர்களை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
வனத்துறை உயர் அதிகாரி நெல்லை நாயகம், ரேஞ்சர் முனிரத்தினம் தலைமையில் வனத்துறையினர், துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடப்பட்ட ஒரு புள்ளிமான், ஒரு நாட்டுத் துப்பாக்கி, ஒரு கேஸ் துப்பாக்கி ஆகியவற்றுடன் ஒரு காரை பறிமுதல் செய்தனர்.
வேட்டையாடியதாக கன்னியாகுமரி மாவட்டம் மணிகட்டிபொட்டல் பகுதியைச் சேர்ந்த ஓமியோபதி டாக்டர் பொன் ஆனந்த் 40, அவரது நண்பர் ராஜலிங்கம் 40, தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தைச் சேர்ந்த ரஞ்சித்சிங் ராஜா 40 ஆகியோரை கைது செய்தனர்.
பலத்த காயத்துடன் இருப்பதால் பொன் ஆனந்த் தென்காசி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அவர் சிகிச்சைக்குப்பின் சிறைக்கு கொண்டு செல்லப்பட உள்ளார்.
மற்ற இருவரும் நேற்று ஆலங்குளம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர்.
வன அதிகாரி ஒருவர் கூறுகையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த தி.மு.க., இளைஞரணி பிரமுகர் முகேஷ் என்பவர் தலைமையில் 10 பேர் குழுவினர் 3 கார்களில் வேட்டைக்கு வந்துள்ள னர்.
இதில் ஒரு காருடன் மூன்று பேர் மட்டும் பிடிபட்டனர். இரண்டு கார்களுடன் தப்பிய 7 பேரை தேடி வருகிறோம்.
அதிலும் வேட்டையாடப்பட்ட புள்ளிமான்கள் இருக்கலாம் என தெரிகிறது என்றார்.