/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
கொய்யாப்பழம் சாப்பிட்ட ஆடுகள் முகம் சிதறி பலி
/
கொய்யாப்பழம் சாப்பிட்ட ஆடுகள் முகம் சிதறி பலி
ADDED : ஏப் 24, 2024 02:24 AM
சங்கரன்கோவில்:கரிவலம்வந்தநல்லுார் அருகில் கொய்யாப்பழத்தை தின்ற இரண்டு ஆடுகள், அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி குண்டு வெடித்ததில் முகம் சிதறி பலியாயின.
கரிவலம்வந்தநல்லுார் அருகில் உள்ளது ஒப்பனையாள்புரம் கிராமம். இங்குள்ள காலனியைச் சேர்ந்த வேலு மகன் முருகன், ஆடு மேய்க்கும் தொழிலாளி.
நேற்று முன்தினம் மாலை கரிவலம்வந்தநல்லுார் பெரிய கண்மாய் அருகில், முருகன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது கீழே கிடந்த கொய்யாப்பழத்தை இரண்டு ஆடுகள் தின்றன.
கொய்யாப்பழத்தை சாப்பிடும்போது இரு ஆடுகளும் முகம் சிதறி இறந்தன. பின்னர் கொய்யாப்பழத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி வெடித்ததில் இரண்டு ஆடுகளும் இறந்தது தெரியவந்தது. தொழிலாளி முருகன் போலீசில் புகார் செய்தார்.
கரிவலம்வந்தநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

