/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரோட்டில் திரியும் மாடுகளை பிடிப்பது எப்போது: மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
/
ரோட்டில் திரியும் மாடுகளை பிடிப்பது எப்போது: மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
ரோட்டில் திரியும் மாடுகளை பிடிப்பது எப்போது: மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
ரோட்டில் திரியும் மாடுகளை பிடிப்பது எப்போது: மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 28, 2024 05:35 AM

திருப்புவனம், : திருப்புவனத்தில் மார்க்சிஸ்ட் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கோயில் மாடுகளை பிடிக்க கயிறு, ஆட்களை ஏற்பாடு செய்கிறோம் என கூச்சலிட்டு பேரூராட்சியை குற்றம்சாட்டினர்.
திருப்புவனம் பேரூராட்சியில் 18 வார்டுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இதில் 10 மற்றும் 11 வது வார்டு மட்டும் மதுரை- - ராமேஸ்வரம் அகல ரயில் பாதையின் மறுபுறம் அமைந்துள்ளது.
இதனால் ரயில் பாதையை கடந்துதான் மின்சாரம், குடிநீர் விநியோகம் செய்ய முடியும், ரயில்வே நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறுவதில் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் செய்வதாகவும், நகரில் 50க்கும் மேற்பட்ட கோயில் மாடுகள் வலம் வருவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கின்றனர்.
இதனை கண்டித்து பேரூராட்சி முன் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நகர் செயலாளர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தண்டியப்பன் கண்டன உரையாற்றினார்.
செயற்குழு உறுப்பினர் வீரபாண்டி, மாவட்ட குழு ஜெயராமன், சக்திவேல் பங்கேற்றனர்.
ஒன்றிய செயலாளர் அய்யம்பாண்டி பேசியதாவது, கோயில் மாடுகளால் பள்ளி மாணவர்கள், முதியோர் அச்சத்தில் நடமாடுகின்றனர்.
ரோட்டில் திரியும் மாடுகளை பிடிக்க கோரி பல முறை திருப்புவனத்தில் கடையடைப்பு போராட்டம் அறிவிக்கும் போது மட்டுமே, அதிகாரிகள் சமரசம் செய்துவிட்டு செல்கின்றனர்.
கோயில் மாடுகளை பிடிக்க ஆட்கள், கயிறுகளை கூட ஏற்பாடு செய்து தருகிறோம் என பேரூராட்சியிடம் உத்தரவாதம் அளித்தும், பேரூராட்சி நிர்வாகம் மாடுகளை பிடிக்கவில்லை, என பேசினார்.
பின்னர் திருப்புவனம் பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடியிடம் மனு அளித்தனர்.

