sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 3 மாதங்களாக ஊதியம் நிறுத்தம்

/

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 3 மாதங்களாக ஊதியம் நிறுத்தம்

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 3 மாதங்களாக ஊதியம் நிறுத்தம்

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 3 மாதங்களாக ஊதியம் நிறுத்தம்


ADDED : மார் 09, 2024 08:35 AM

Google News

ADDED : மார் 09, 2024 08:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்காக 2006ம் ஆண்டு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் என்ற பெயரில் கொண்டுவரப்பட்டு பிறகு பெயர் மாற்றப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் பெண்கள் உள்ளிட்டோருக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் தரப்படுகிறது.

நாடு முழுவதும் 6 கோடி குடும்பங்கள் இந்த வேலை வாய்ப்பை நம்பியுள்ளனர். தமிழகத்தில் 2022--23 நிதி ஆண்டுக்கு தினசரி ஊதியம் ரூபாய் 281 வழங்கப்பட்ட நிலையில் 2023-24ம் நிதியாண்டுக்கு 294 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இத்திட்டத்தில் வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.

இத்திட்டத்தில் நடைபெற்ற கட்டுமான பணிகளுக்கும் பணம் விடுவிக்கப்படவில்லை. இந்நிலையில் மார்ச் 7ம் தேதி முதல் இத்திட்டப் பணிகள் திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது.

வாரந்தோறும் வியாழக்கிழமை பணி துவங்கும் நிலையில், அதற்காக மார்ச் 6 ம் தேதி அந்தந்த ஊராட்சிகளின் மக்கள் நலப் பணியாளர், பணித்தள பொறுப்பாளர்கள் ஒன்றிய அலுவலங்களுக்கு சென்று பணி நிரவல் பட்டியலை கேட்டனர். மார்ச் 7ம் தேதி அந்தந்த ஊராட்சிகளில் காலையில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் அன்றைய தினம் பணிகள் நடைபெற வேண்டாம் என அனைத்து ஊராட்சிகளுக்கும் வாய்மொழி உத்தரவாக தெரிவிக்கப்பட்டு பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதை நம்பி இருந்த தொழிலாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அதிகாரிகள் தரப்பில் தெரிவித்ததாவது, நிர்ணயிக்கப்பட்ட பணிகள் முடிக்கப்பட்டு நிதியாண்டு இறுதி என்பதால் பணிகள் நிறுத்தப்பட்டு விட்டது. நிதி ஒதுக்கீடு வந்ததும் நிலுவை சம்பளம் போடப்பட்டு பணிகள் தொடங்கும், என்றனர்.






      Dinamalar
      Follow us