/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அடிப்படை வசதிகள் இல்லாத கிராமங்கள்
/
அடிப்படை வசதிகள் இல்லாத கிராமங்கள்
ADDED : ஜூலை 22, 2025 11:42 PM

இளையான்குடி; இளையான்குடி அருகே வீராந்திடல், கல்லணி கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கலங்காதாகோட்டை ஊராட்சிக்குட்பட்ட வீராந்திடல், கல்லணி ஆகிய கிராமங்களில் பலர் வசிக்கின்றனர்.
இந்த கிராமங்களுக்கு செல்லும் ரோடு அமைக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டதால் தற்போது ரோட்டில் செடிகள் வளர்ந்துள்ளதால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மேலும் இப்பகுதியில் குடிநீர்,மின்சாரம்,தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
கிராம மக்கள் கிராமங்களை விட்டு காலி செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அடிப்படை வசதிகள் நிறைவேற்றக்கோரி பா.ஜ., சார்பில் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

