ADDED : டிச 24, 2025 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி எஸ்.எஸ்.நகரைச் சேர்ந்தவர் கருப்பையா, இறைச்சிக்கடை நடத்துகிறார். நேற்று மதியம் கீழக்காடு ரோட்டில் உள்ள ஆதி திராவிட மாணவிகளுக்கான சமூக நலவிடுதி அருகே வேனில் சென்றபோது வேன் உள்ளே தீப்பற்றியது.
கருப்பையா கீழே இறங்கி தப்பினார். சிறிது நேரத்தில் வேனின் உள்பகுதி, இன்ஜின், இருக்கை உள்ளிட்ட அனைத்தும் எரிந்தன.அப்பகுதியில் இருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். சிங்கம்புணரி போலீசார் விசாரிக்கின்றனர்.

