/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருமயம் - மானாமதுரை ரோடு மறுசீரமைப்பு ரூ.54 கோடியில் பணிகள் நடக்கிறது
/
திருமயம் - மானாமதுரை ரோடு மறுசீரமைப்பு ரூ.54 கோடியில் பணிகள் நடக்கிறது
திருமயம் - மானாமதுரை ரோடு மறுசீரமைப்பு ரூ.54 கோடியில் பணிகள் நடக்கிறது
திருமயம் - மானாமதுரை ரோடு மறுசீரமைப்பு ரூ.54 கோடியில் பணிகள் நடக்கிறது
ADDED : அக் 12, 2024 04:33 AM
சிவகங்கை: பெரம்பலுார் - - மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில், திருமயம் முதல் மானாமதுரை வரையுள்ள ரோட்டை மறுசீரமைக்க மத்திய அரசு ரூ.54 கோடி ஒதுக்கீடு செய்து, பணிகள் நடைபெற்று வருகிறது.
பெரம்பலுார் முதல் அரியலுார், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை வழியாக மானாமதுரை வரை 212 கி.மீ., துார ரோடு தேசிய நெடுஞ்சாலையாக (என்.எச்.,226) தரம் உயர்த்தப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலை தரத்திற்கேற்ப இந்த ரோட்டை 2017 ல் தரம் உயர்த்தி அமைத்தனர். இந்த ரோட்டில் 6,000க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் கடக்கின்றன.
வரும் காலங்களில் கனரக வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போன்று இந்த ரோடு அமைத்து 7 ஆண்டு நிறைவு பெற்ற நிலையில், ரோட்டின் தரம் பாதிக்கப்படாமல் இருக்கவும், கனரக வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில், ரோட்டை அதன் தரத்திற்கு மறுசீரமைப்பு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
திருமயம் -- மானாமதுரைக்கு ரூ.54 கோடி
முதற்கட்டமாக புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் முதல் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வரையிலான 75 கி.மீ., துார ரோட்டை மறுசீரமைக்க மத்திய அரசு ரூ.54 கோடி ஒதுக்கியுள்ளது.
இந்நிதியில், தற்போதுள்ள ரோட்டின் மேல் 30 மி.மீ., கனத்திற்கு புதிதாக ரோடு போடும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி முதற்கட்டமாக திருக்கோஷ்டியூர் முதல் மதகுபட்டி வரை நடந்து வருகிறது.
படிப்படியாக திருமயம் முதல் மானாமதுரை வரை நடைபெறும். இதில், புதிதாக ரோடு போட ரூ.24 கோடி, ரோட்டின் நடுவிலும், ஓரத்திலும் 'சோலார் ஸ்டட் லைட்', வேகத்தடைக்கு 'சோலார் ஸ்டட் லைட்' பொருத்துதல், சிக்னல் போர்டு அமைத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கு ரூ.30 கோடி என ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது.
ரோட்டை பாதுகாக்க சீரமைப்பு
தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் அருண்பிரசாத் கூறியதாவது: ரோட்டின் தரத்தை உயர்த்தும் நோக்கில், மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது.
இதனால் கனரக வாகனங்கள் வருகையால், ரோடு சேதமடையாமல் பாதுகாக்கும் நோக்கில், முன்கூட்டியே ரோடு மறு சீரமைப்பு பணி நடக்கிறது, என்றார்.

