/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
'‛குண்டாசில்' மூன்று பேர் கைது
/
'‛குண்டாசில்' மூன்று பேர் கைது
ADDED : டிச 19, 2025 05:32 AM
சிவகங்கை: சிவகங்கையில் கொலை, கஞ்சா வழக்கில் ஈடுபட்ட 3 பேரை குண்டர் தடுப்பு காவலில் போலீசார் சிறையில் அடைத்தனர்.
மானாமதுரை, தாயமங்கலம் ரோட்டில் பாண்டியை 28 அரிவாளால் மர்ம நபர் வெட்டியதில், பலத்த காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இக்கொலை தொடர்பாக மானாமதுரை அருகே பில்லத்தியை சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் 28, கைதானார்.
சாக்கோட்டை மற்றும் சிவகங்கை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக காரைக்குடி கமலநாதன் மகன் ராஜசேகர் 34, சிவகங்கை அருகே வைரம்பட்டி பண்ணை கருப்பு மகன் வசந்தகுமார் 25 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் மூன்று பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்.பி., சிவபிரசாத் பரிந்துரையின் பேரில், கலெக்டர் பொற்கொடி உத்தரவிட்டார்.

