ADDED : செப் 07, 2025 03:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி செஞ்சை அருகே மக்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்து வந்த பாப்பா ஊரணி, விளையாட்டு மைதானமாக மாறிவிட்டது.
காரைக்குடி செஞ்சை அருகே பாரம்பரிய பாப்பா ஊரணி உள்ளது. ஊரணியின் நடுவே கிணறும் அமைந்துள்ளது. ஊரணியில் உள்ள தண்ணீரை அப்பகுதி மக்கள் குடிப்பதற்கும், குளிப்பதற்கு என பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். மேலும் மழைக்காலங்களில் ஊரணி நிரம்புவதால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து வந்தது. இந்நிலையில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பு காரணமாக வரத்து கால்வாய் பலவும் மாயமானது. இதனால், ஊரணிக்கு வரக்கூடிய தண்ணீர் வரத்து தடைபட்டது. தண்ணீர் இல்லாமல் சிறுவர்கள் விளையாடக்கூடிய மைதானமாக ஊரணி மாறி உள்ளது. தண்ணீர் இல்லாமல் அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.