/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பள்ளி முன் தேங்கும் கழிவுநீர் மூக்கை பிடிக்கும் மாணவர்கள்
/
பள்ளி முன் தேங்கும் கழிவுநீர் மூக்கை பிடிக்கும் மாணவர்கள்
பள்ளி முன் தேங்கும் கழிவுநீர் மூக்கை பிடிக்கும் மாணவர்கள்
பள்ளி முன் தேங்கும் கழிவுநீர் மூக்கை பிடிக்கும் மாணவர்கள்
ADDED : அக் 03, 2024 04:31 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பள்ளி முன் தேங்கும் கழிவு நீரால் மாணவர்கள் வகுப்பறையில் மூக்கை பிடித்துக்கொண்டே படிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வொன்றியத்தில் பிரான்மலை அரசு துவக்கப்பள்ளியில் 120 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளி முன் ஓடும் கழிவு நீர் கால்வாய் பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் சாக்கடையாக தேங்கி கிடக்கிறது. பல்வேறு கட்டடங்களில் இருந்து திறந்துவிடப்படும் கழிவு நீர் பள்ளி முன்பாக வெளியேற வழி இல்லாமல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
காற்று அடிக்கும் நேரங்களில் வகுப்பறைக்குள் துர்நாற்றம் செல்வதால் அந்த நேரங்களில் மாணவர்கள் வகுப்பறைக்குள் மூக்கை பிடித்துக் கொண்டுதான் படிக்க வேண்டியுள்ளது. ஆசிரியர்கள் சில நேரங்களில் முகக்கவசம் அணிந்துகொண்டு தான் பாடம் நடத்துகின்றனர். கழிவு நீர் கால்வாயை தூர்வாரி, வருங்காலங்களில் கழிவுநீர் தேங்காதவாறு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

