நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு சட்டக் கல்லுாரி வளாகத்தில் 400 மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது.
திருச்சி - ராமேஸ்வரம் நெடுஞ்சாலை அருகே, 19.16 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டடப்பணிக்கு ரூ.100.45 கோடி ஒதுக்கப்பட்டு புதிய கட்டடம் கட்டும்பணி நடந்து வருகிறது. மாங்குடி எம்.எல்.ஏ., மரக்கன்றுகளை நடும் பணியை தொடங்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் சி.உஷா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். பேராசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

