/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஏப்.,23 முதல் வேலைநிறுத்தம்
/
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஏப்.,23 முதல் வேலைநிறுத்தம்
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஏப்.,23 முதல் வேலைநிறுத்தம்
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஏப்.,23 முதல் வேலைநிறுத்தம்
ADDED : ஏப் 18, 2025 02:28 AM
சிவகங்கை:20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஏப்., 23 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் செயல்படும் கிராம ஊராட்சிகளில் காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடத்தை நிரப்ப வேண்டும். கிராம ஊராட்சி செயலர்களுக்கு 20 சதவீதமும், மற்றவர்களுக்கு 10 சதவீத பதவி உயர்வு அதிகாரத்தை கலெக்டர்களிடம் ஒப்படைக்க வேண்டும், புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கலெக்டர் பி.ஏ., (சத்துணவு) பணியிடங்களை தோற்றுவிக்க வேண்டும்.
சத்துணவு மையங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உட்பட 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஏப்., 23 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
சங்க மாநில தலைவர் சி.காந்திமதிநாதன் கூறியதாவது:
உள்ளாட்சி துறைகளில் கிராம ஊராட்சி செயலர் முதல் பி.டி.ஓ., இன்ஜினியர்கள் வரை உள்ள 17,000 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள், என்றார்.

