/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வாரச்சந்தையில் கழுத்தை அறுக்கும் கூரை கயறு
/
வாரச்சந்தையில் கழுத்தை அறுக்கும் கூரை கயறு
ADDED : செப் 27, 2024 06:27 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி வாரச்சந்தையில் மக்களின் கழுத்தை அறுக்கும் வகையில் ஆபத்தான முறையில் கூரை கயறு கட்டப்படுகிறது.
இப்பேரூராட்சியில் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் வாரச்சந்தை இயங்குகிறது. வியாழன் தோறும் செயல்படும் இச்சந்தையின் கிழக்குப்புற வாசலில் இருந்து உள்ளே டூவீலர் பார்க்கிங் பகுதிக்கு செல்வதற்கு வழி உள்ளது. அப்பகுதியில் கடை அமைப்பவர்கள் வெயிலுக்கு கூரை அமைக்கும் போது மெல்லிய பிளாஸ்டிக் கயறுகளை உயரம் குறைவாக கட்டிவிடுகின்றனர்.
சந்தைக்கு டூவீலர்களில் வருபவர்களின் கழுத்துகளை இக்கயறு பதம் பார்க்கின்றன. நடந்து செல்வோரும் பாதிக்கப்படுகின்றனர்.
நேற்று ஒரே நாளில் நான்கு பேர் கழுத்தில் கயிறு இறுகி தப்பினர். அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பாக பேரூராட்சி நிர்வாகம் கயறுகளை முறையாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

