ADDED : மார் 02, 2024 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழையனுார்: பழையனுார் அருகே தஞ்சாக்கூர் அரசு நெல் கொள் முதல் மைய காவலாளி முருகானந்தம் 35, கலியனேந்தல் விவசாயி ராஜ்குமார் 45, ஆகியோரிடம் கடந்த மாதம் 26 ம் தேதி டூ வீலரில் வந்த மூன்று பேர் அலைபேசி, பணம் ஆகியவற்றை மிரட்டி பறித்து சென்றனர்.
பழையனுார் இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையில் எஸ்.ஐ.,நாகராஜன், ஏட்டுகள் விசாரணை நடத்தி ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த சரண் 19, செந்தாமரை 30, மருதமுத்து 23 ஆகிய மூன்று பேரை கைது செய்து அவர்களிடமிருந்து அலைபேசிகள் வழிப்பறிக்கு பயன்படுத்தப்பட்ட டூவீலரை பறிமுதல் செய்தனர்.

