ADDED : மார் 02, 2024 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் நாட்டின் மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஓட்டளிப்பது என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சிவகங்கை நெடுஞ்சாலை கோட்டபொறியாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் மாரி தலைமை வகித்தார். மாவட்ட துணை, இணை நிர்வாகிகள் சின்னப்பன்,கணேசன், வீரையா முன்னிலை வகித்தனர்.
அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கண்ணதாசன் துவக்க உரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் முத்தையா கோரிக்கையை விளக்கி பேசினார்.
அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் நிறைவுரை ஆற்றினார். சங்க மாவட்ட பொருளாளர் சதுரகிரி நன்றி கூறினார்.

